சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பின் போது அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா 50,000 ஆக அதிகரிப்பு.
முக்திநாத் செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் தீர்த்தமாட 50 லட்சத்தில் சிறப்பு நடைபாதை அமைக்கப்படும் என்றார்.