தமிழக முதல்வர் ஸ்டாலின் வள்ளுவம் மற்றும் வள்ளலார் என பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் முதல்வர் சொன்னது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, சனாதன இந்து தர்மத்தில் தர்மம் என்றால் அறம், அர்த்தம் என்றால் பொருள் மற்றும் காமம் என்றால் இன்பம். இந்த மூன்றில் உங்கள் வாழ்க்கை அமைந்தால் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும். இந்த சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தான் திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார்.

ஜோதி வடிவில் இறைவனை வள்ளலார் வணங்க சொன்னதும் சனாதனம் தான். நீங்கள் திருக்குறளை மலம் என்று கூறிய வரை தான் அப்பா என்று கூறுகிறீர்கள். சிலப்பதிகாரத்தை ஈவேரா விபச்சாரியின் கதை என்று கூறவில்லையா.? இந்து மதத்தின் தமிழ் மொழியில் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிடர்கள். என் தாய்மொழி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவெராவை தந்தை என்று சொல்கிறவர்கள் தமிழ் மொழியின் விரோதிகள். திருவள்ளுவருக்கு இந்த உடை தான் அணிய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா. மேலும் நீங்கள் வள்ளுவருக்கு வெள்ளை உடை அழியும்போது நாங்கள் காவி உடை அணிய கூடாதா என்று கூறினார்.