தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடந்த வருடம் லியோ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்பு குவிந்து வரும் நிலையில் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விசுவம்பரா படத்திலும், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி என்ற படத்திலும், ஒரு மலையாள படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை திரிஷா மலையாளத்தில் நடிகர் டெவினோ தாமஸுக்கு ஜோடியாக ஐடென்டிட்டி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை திரிஷா ஈரோட்டுக்கு வந்திருப்பதை தெரிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்று த்ரிஷா த்ரிஷா என ஆர்ப்பரித்தனர். ஆனால் படக்குழுவினர் ரசிகர்களிடம் சூட்டிங் நடந்து கொண்டிருப்பதால் இங்கிருந்து செல்லும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் ரசிகர்கள் அதைக் கேட்காமல் திரிஷாவின் கேரவனை சுற்றி வளைத்தனர். இது குறித்து த்ரிஷாவுக்கு பட குழு தகவல் தெரிவித்த நிலையில் அவர் கேரவனை விட்டு வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோவை நடிகை திரிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Erode🫰🏻#identity pic.twitter.com/JITjfPgSyg
— Trish (@trishtrashers) April 22, 2024