டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கலை பிரிவில் பிரபல பாடகி உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசு தலைவர் வழங்கி கௌரவித்தார். மேலும் விழாவில் 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், 17 பேருக்கு பத்மபூஷன் விருதும், 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.