சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலணியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் தனியார் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி வேலை முடிந்து சாதிக் பாஷா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார்த்திகேயன் சாலையில் இருந்த மரத்தின் கிளை முறிந்து சாதிக் பாஷாவின் மீது விழுந்தது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த சாதிக் பாஷாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாதிக் பாஷா பரிதாபமாக இறந்துவிட்டார். இவருக்கு மெகதபின்(45) என்ற மனைவியும், பட்டதாரியான தானேஷ்(22) என்ற மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஜூவேதிதா(15) என்ற மகளும் இருக்கின்றனர்.