சென்னையில் உள்ள க்ளெனேகிள்ஸ்  ஹெல்த் சிட்டியில் மருத்துவர்கள் 6 மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். பூடானை சேர்ந்த 6 மாத குழந்தை ஒன்று பிறந்ததிலிருந்து மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளது.

மேல் சிகிச்சைக்காக குழந்தையை அடைத்துக் கொண்டு பெற்றோர்கள் சென்னைக்கு வந்த நிலையில் தாயின் கல்லீரல் பகுதி தானமாக அந்த குழந்தைக்கு பொருத்தப்பட்டது. தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கல்லீரல் மாற்று சிகிச்சை அறுவை இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.