தமிழ் சின்னத்திரை நடிகை அர்ச்சனா அண்மையில் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அதற்கு பாடகி சின்மயி கவனமாக இருங்கள் என்று கமெண்ட் செய்திருப்பது வைரலாகி வருகிறது. இதில் சின்மயி முன்னதாக கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் ஒரு ரசிகையாகவே கவிஞர் வைரமுத்துவை சந்தித்து பேசியதாக தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனா விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வைரமுத்துவை சந்தித்த நிலையில், தனியாக அவரை பார்க்க வேண்டாம் என பாடகி சின்மயி எச்சரித்தார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அர்ச்சனா, தவறு நடந்தால் அமைதியாக இருக்க மாட்டோம். வைரமுத்து மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு என்று கூறியுள்ளார்.