இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் “வாரிசு”. இப்படத்தில் ஹீரோயினியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சங்கீதா, ஷியாம், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

இந்நிலையில் வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் மக்களை கண்கலங்க வைக்கும் என நடிகை நந்தினி ராய் கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் எந்த அளவுக்கு தன்னால் இறங்கி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் ஸ்டைலாகவும், ரொம்ப எமோஷனல் ஆகவும் நடித்துள்ளார். கண்டிப்பாக இது அனைவருக்கும் ஆன படம் என தெரிவித்தார். வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 2ஆம் தேதி (நாளை) வெளியாகிறது.