முன்னணி நடிகர்களான அஜித் நடித்த “துணிவு” திரைப்படமும், “விஜய்” நடித்த வாரிசு திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து இருக்கும் தியேட்டர்களில் விஜய், அஜித் படங்கள் திரையிடப்படுவதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் படங்கள் வெற்றி பெற அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு பேனர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் இருக்கும் தியேட்டர்களுக்கு அருகே விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து ஒரு பேனரை வைத்துள்ளனர். அந்த பேனரில் அஜித் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவது, பின்னால் விஜய் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும் தல, தளபதி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் என அச்சிட்டுள்ளனர். இந்த பேனர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.