திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு மற்றும் வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி லட்டு பிரசாதம் 10 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், வடை ஆறு ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே தரிசனம் கட்டணம் நூறு ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென இந்த விலை உயர்த்தப்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.