இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைக்கும் உணவுகளை விட உணவகங்களில் சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. உள்ளூர் உணவு வகைகளை விட மற்ற மாநில உணவுகளை பலரும் ருசித்து சாப்பிடுகின்றனர். சாலையில் கால் வைக்கும் இடம் எல்லாம் பாஸ்ட் புட் கடைகள் தற்போது அதிகரித்து விட்டது. அதனால் பாதிப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனைப் போலவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட மாநில தொழிலாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சியில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவகத்தின் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.