
இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த மூலையில் வித்தியாசமான மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் அது வீடியோக்களாக வெளிவந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது திருமணத்தின் போது மண மேடையில் வைத்து மணமகளின் தாய் திருமணத்தை நிறுத்துமாறு கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
அதாவது திருமண வரவேற்பின் போது மணமகன் மது குடித்து விட்டு வந்துள்ளார். இதன் காரணமாக மணமகளின் தாய் திருமணத்தை நிறுத்திவிட்டார். அவர் அங்கிருந்தவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு தயவுசெய்து திருமணத்தை நிறுத்திவிட்டு இங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார். அவரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் அவர் கேட்க மறுத்த திருமணத்தை நிறுத்த கூறுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram