ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு நபர் 5 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கினார். அதன் பின் அதனை எடுத்துக் கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டார். இந்நிலையில் கேனில் இருந்த பெட்ரோல் சாலையில் கசிந்துள்ளது. அவர் சென்ற பாதை வழியே பெட்ரோல் லீக் ஆகி கசிந்து வடிந்தது.

அப்போது சாலை ஓரமாக இருந்த கடைகளில் நின்று பீடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் அதனை சாலையில் வீசியுள்ளார். அந்த பீடி சாலையில் கிடந்த பெட்ரோலில் பற்றி கொண்ட தீ சரசரவென அனைத்து கடைகளுக்கும் பரவியது. திடீரென பரவிய தீயினால் ஒரு கடை எரிந்து முற்றிலும் நாசமானது. அதோடு கடையின் முன் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் அவ்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“>