ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்தார். இதனால் இந்த தொகுதியில் இன்னும் 6 மாதங்களில் ‌ இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன்.

உங்களுடைய நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். நீங்கள் சவாலை ஏற்றுக் கொள்வீர்களா. நான் தோற்றால் நீங்கள் 5 நிமிடத்தில் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள். நீ தமிழகத்தின் மகன். தமிழ்நாடு அல்லது தமிழகமா என்று பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு நேரடியாக சவால் விட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.