தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். துணைத் தலைவர்கள் உட்பட தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார் செல்வப்பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களாக கோபண்ணா, சொர்ணா சேதுராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களாக டி.செல்வம், கே. தணிகாசலம், அருள் பெத்தையா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.