தமிழகத்தில் 6-12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1-ஆம் தேதியும் 1-5 ஆம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதியும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் திருச்சியில் நடந்த மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்தித்தபோது, முதல்வர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருப்பதால் இன்று அவரை தொடர்புகொண்டு ஆலோசனை செய்த பின் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.