சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லெக்கானி, நிர்வாக இயக்குனர் ஆர்.மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 1.62 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் ஆதாரங்கள் இணைக்கப்பட்டு விட்டது.

அதிலும் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 77.53 சதவீத மின் நுகர்வோர்களும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 51 சதவீத பேரும் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு டிசம்பர் 31-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பின் கால நீடிப்பு இருக்கும் என இருந்து விடக்கூடாது. அதனால் அனைத்து மின் பயனீட்டாளர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும். விடுமுறை நாட்கள் அல்லாமல் மற்ற நாட்களில் சராசரியாக மூன்று முதல் நான்கு லட்சம் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதாரினை இணைத்துக் கொண்டிருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.