தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் கடந்த வாரம் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் சென்னையில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு காரணங்களால் டோக்கன் பெற முடியாதவர்கள் ஜனவரி 13ஆம் தேதி அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பொங்கல் பரிசு தொகைக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.