பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கண்டன கோஷம் எழுப்பினர். அதன்பின் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 12ஆம் தேதிக்குள் கொடுத்து முடிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் குறித்த ஆய்வுக்கு பின் பேசிய அவர், ஜனவரி 9 முதல் 12ஆம் தேதி வரை பொங்கல் பரிசுகளை மக்கள் ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பரிசு தொகுப்பில் உள்ள கரும்புகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே அதிகாரிகள் மூலம் வாங்கப்படுகிறது. இடைத்தரகர்கள் யாரும் இல்லை என அவர் தெரிவித்தார்.