சில நாட்களுக்கு முன்பு பா.ம.க சார்பாக நடத்தப்பட்ட புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பல அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் அதிமுக, திமுக கட்சிகளை நேரடியாகவும், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியை மறைமுகமாகவும் விமர்சனம் செய்திருந்தார். அதன்பின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அதிமுக தயவால் தான் பாமக பாராளுமன்றம் செல்ல முடிந்தது என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பாமக EX எம்எல்ஏ கணேஷ்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, கடந்த 1998ல் ராமதாஸை தேடி வந்து கூட்டணி வைத்தது ஜெயலலிதாதான். அதேபோல் 2019ல் நடந்த இடைத்தேர்தலில் பாமக கூட்டணியால் தான் இபிஎஸ் ஆட்சியை தக்கவைக்க முடிந்தது. எதையும் தெரிந்து பேசுங்கள் என எம்எல்ஏ கணேஷ்குமார் கூறியுள்ளார்.