கேரளாவில் பெவ்கோ என்ற பெயரில் அரசு மதுபானக் கழகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 250க்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகிறது. பொதுவாக விஷேச நாட்களில் மது விற்பனையானது களைக்கட்டும். அந்த வகையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மது விற்பனை களைகட்டியுள்ளது.

அதாவது, கேரளாவில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் ரூபாய்.107 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரே கடையில் மட்டும் ரூபாய் 1.12 கோடி அளவிற்கு மது விற்றுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கடந்த மாதம் 22 முதல் 31 ஆம் தேதி வரை கேரளாவில் ரூபாய்.686.28 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.