தமிழகத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றனர். இன்றோடு விடுமுறை முடிவடைவதால் இன்று மாலை சொந்த ஊரிலிருந்து பலரும் சென்னைக்கு திரும்புவார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக பல பயணிகள் பேருந்து பயணத்தை விரும்புவார்கள் என்பதால் பேருந்துகளில் அதிக அளவு கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், பெங்களூர், ஓசூர், ஈரோடு, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வர 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன் பிறகு இன்றைய தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை 500 சிறப்பு பேருந்துகளும், திங்கள் கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதன் பிறகு இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெறுவதற்கும், பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் www.tnstc.in‌ மற்றும் TNSTC official App போன்றவற்றை அணுகுமாறு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதோடு கூட்ட நெரிசல் அதிக அளவில் இருந்தால் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் பேருந்துகளில் செல்லும் பயணிகள் மற்றும் பேருந்து நடத்தினர், ஓட்டுநர் போன்றவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.