12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு ஏதுவாக ஹால் டிக்கெட் வழங்கக்கூடிய பணியை துரிதப்படுத்த தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை மதியம் 2 மணி முதல் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கென  கொடுக்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவுசெய்து செய்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் அவர்களுடைய தேர்வு விவரம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில், அவற்றை இறுதி செய்யக்கூடிய பணிகள் கூட கடந்த மாதம் நடைபெற்று வந்தது. அவை முழுமையாக நிறைவு பெற்ற சூழ்நிலையில் நாளை மதியம் முதல் ஒவ்வொரு பள்ளியின் உடைய தலைமை ஆசிரியரும் தங்கள் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வின் போது மாணவர்கள் ஹால் டிக்கெட் காண்பிக்கப்பட வேண்டும். அதேபோல எழுத்து தேர்வுக்கு வரக்கூடிய மாணவர்கள் வழக்கம் போல ஒவ்வொரு தேர்வின் போதும் ஹால் டிக்கெட்டை தேர்வறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற விவரங்களும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.