தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி நடைபெற்ற வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது பாஸ் ஸ்கேம் என்ற புதிய வகை மோசடி முக்கிய பிரமுகர்களை அச்சுறுத்தி வருகின்றது. அண்மைக்காலமாக அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை பாஸ் ஸ்கேம் என்ற சைபர் குற்றம் அச்சுறுத்தி வருகிறது. ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு ஒன்று வரும்.

அதில் பேசும் அதிகாரி நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன் எனக்கு அவசரமாக பரிசு கூப்பன் தேவைப்படுகிறது, பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து கூப்பன்களை வாங்கி அனுப்புங்கள்,நான் பிறகு பணம் கொடுத்து விடுகிறேன் என்று அவசரமாக கூறுவார். இந்த குறுஞ்செய்தி வந்தவுடன் ஊழியர் தனக்கு பரிசு கூப்பன் வாங்க தெரியாது என்று கூறினாலும் எதிர்முனையில் அதிகாரி போல பேசும் நபர் பரிசு கூப்பன் வாங்குவதற்கு உரிய இணைப்பை அவரது கைபேசிக்கு அனுப்பி ஒரு லட்சத்திற்கு 10 கூட்டங்களை வாங்கி அனுப்புங்கள் என கூறுவார். அதனை கிளிக் செய்தால் நம்முடைய அனைத்து பணமும் பறிபோய்விடும். எனவே இது போன்ற மோசடிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்