தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2153 போலீசார் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது பல போலீசார் பணியிட மாற்றம் கேட்டு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று டிஜிபி சங்கர் ஜிவால் ஒரே நாளில் இத்தனை பேருக்கு பணியிட மாற்றம் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் ஒரே நாளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான உத்தரவுகளை பிறப்பித்து அவர்களை புதிய இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்தப்பட்டுள்ளது..