தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கான கல்வி தகுதி, உளவியல், சமூகப்பணி மற்றும் சமூகவியல் போன்ற பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் ஏழு காலி பணியிடங்கள் உள்ள நிலையில் சம்பளம் ரூ.35,600 – ரூ.1.30 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.