தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுமார் 3.28 லட்சம் மாணவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார வசதி குறைவால் உயர்கல்வி தொடர முடியாதவர்களுக்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசு கூறியுள்ளது.