தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் தேதியை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அட்டவணையின் படி 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதன்பிறகு 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.