தமிழகத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கொண்டாட பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதன்படி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நேற்று பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இதுவரை எந்த முடிவு எடுக்கவில்லை என்றும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக புதன்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.