தமிழகத்தில் அரசு தினங்களில் பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு ஆகஸ்ட் 15 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வகை டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு ஆணையிட்டுள்ளது.

கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாளை விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகளில் இன்று கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.