தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25 முதல், தமிழகத்தில் தண்ணீர்ப் பந்தல்களை உருவாக்கி மக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்க அறிவுறுத்தினார்