நாடு முழுவதும் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படும்  நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு தினங்களில் பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.  அதன்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு ஆகஸ்ட் 15 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வகை டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு ஆணையிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைந்த தனியார் பார்கள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது