ஈரோடு:

அந்தியூரில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர், தவிட்டுப்பாளையம், பெருமாபாளையம், நகலூர் முனியப்பன் பாளையம், தோட்டக் குடியாம்பாளையம், தோப்பூர், கரட்டூர், பருவாச்சி, மைக்கேல் பாளையம், கொண்டையம் பாளையம், பச்சாம் பாளையம் பிரம்மதேசம் செம்புளிச்சாம் பாளையம், புதுப்பாளையம், கெட்டி சமுத்திரம், சங்கராப்பாளையம், எண்ணமங்கலம் வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தேனி:

வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சிப் பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழில் பேட்டை, சிவாஜி நகா், வனச் சாலை, அரப்படித் தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தென்காசி:

வாசுதேவநல்லூர் அருகே விஸ்வநாதப்பேரி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி மற்றும் வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

நெல்லை:

மேலகல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலகல்லூர், சுத்தமல்லி, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கடலூர்:

தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அகரம், பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை ஏற்படும்.

மதுரை:

அலங்காநல்லூர் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலங்காநல்லுார், தேசிய சர்க்கரை ஆலை, டி.மேட்டுப்பட்டி, பண் ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடை யப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல்:

இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி பகுதிகளின் மின்தடை ஏற்படும்.

ராணிப்பேட்டை:

இன்று (சனிக்கிழமை) வாழப்பந்தல், மேல் புதுப்பாக்கம், ஆயர்பாடி பகுதிகளிலும், 20ஆம் தேதி இருங்கூர், மாம்பாக்கம், ஆரூர், கன்னிகாபுரம், மருதம், தட்டச்சேரி, பொன்னம்பலம், சொரையூர், சிவபுரம், வாழைப்பந்தல், மேல் புதுப்பாக்கம், ஆயர்பாடி, குப்பிடிசாத்தம், பென்னகர், தோனிமேடு, பாலி, கோடாலி, வேம்பி, அத்தியானம், பாரிமங்கலம், ராந்தம், கொரட்டூர், செங்கனாபுரம் ஆயிரம் மங்கலம், பெருமாந்தாங்கல் மற்றும் கொருக்காத்தூர் பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி:

இன்று (சனிக்கிழமை) விளாத்திகுளம் அருகே நாகலாபுரம், புதூர், குருவார்பட்டி, கோடங்கிபட்டி, அயன் மடமலாபுரம், தாப்பாத்தி முகாம், என்.வேடப்பட்டி, கடல்குடி, பூதலாபுரம், மாதலாபுரம், கந்தசாமிபுரம், ஜெகவீரபுரம், மாவிலோடை உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம்:

தலைவாசல் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி தலைவாசல், ஆறகளூர், ஆரத்திஅகரம், கோவிந்தம்பாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி, நத்தக்கரை, இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியாக்குறிச்சி,அம்மம்பாளயம், காட்டுகோட்டை, மணிவிழுந்தான் காலனி, பட்டுத்துறை, நாவக்குறிச்சி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை:

இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரணி நகரம், இரும்பேடு, ச.வி.நகரம், வெள்ளேரி, வெட்டியாந்தொழுவோம், அரியப்பாடி, குன்னத்தூர், சேவூர், முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.