தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 17ஆம் தேதி காணும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் இன்று முதல் வருகின்ற 17ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 18ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்.
அரசு சார்பில் வருகின்ற 17ஆம் தேதி வரை பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தனியார் பள்ளி கல்லூரிகளில் குறிப்பிட்ட சிலருக்கு 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதால், தமிழர் திருநாளை கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் பாரபட்சமில்லாமல் ஆசிரியர்கள்,பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருக்கும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.