காசநோய் பாதித்தவருக்கு ஊட்டச்சத்து உதவித்தொகை இந்த மாதம் முதல் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட மாநில அரசு 500 ரூபாய் ஊட்டச்சத்து உதவி தொகையாக வழங்குகிறது. அந்த தொகையை இந்த மாதம் முதல் இரண்டு மடங்காக உயர்த்தி 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கூறியுள்ளார்.