தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த அக்டோபர் 1ஆம் தேதி ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நிலவேம்பு கஷாயம் வழங்கவும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.