தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்மையில் தேர்வு முடிவு அடைந்த நிலையில் நேற்று முன்தினம்  முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

இந்த  நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை சுமார் 9. 76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்திற்கு கைபேசி கொண்டுவர அனுமதி கிடையாது.