இந்தியாவில் எரிபொருள் தேவையை குறைக்கும் நோக்கத்திலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மின் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது மின்சார வாகனங்கள் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு உதவும் விதமாக ஆங்காங்கே சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு அடுத்த மூன்று வருடங்களுக்கு வரி விளக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 100% வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ள நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.