தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு 300 இடங்கள் உள்ளது. இவற்றை நடப்பு ஆண்டில் இறப்புவதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலமாக செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது பட்டதாரிகள் ஒவ்வொரு கல்லூரிக்கும் கட்டணமாக 60 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையவழியில் செலுத்த இயலாதவர்கள் அரசின் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் டிடி எடுத்து அல்லது நேரடியாக பணத்தை செலுத்தலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு 9363462070, 9363462007, 936342042, 9363462024 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.