தமிழகத்தில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக விசைப்படகுகளும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி 1.79 லட்சம் குடும்பங்களுக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வீதம் 89.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு நிவாரணத் தொகையை ஒதுக்கியதைத் தொடர்ந்து மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்குகின்றது.

Leave a Reply