தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை விவாதங்கள் நடைபெற்ற நிலையில் அதில் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விட்டால் சமுதாயத்திற்கு ஐந்து நாட்கள் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

வெயில் காரணமாக மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய அன்பில் மகேஷ் இவ்வாறு பதிலளித்துள்ளார். இதன் மூலம் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை இல்லை என்பது உறுதியாகி உள்ளது.