தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு மாவட்ட தலை அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 0424-2275860 என்ற தொலைபேசி எண், 9499055942 என்ற கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.