தமிழகத்தில் சற்றுமுன் உதயமானது புதிய கட்சி…. நடிகர் எஸ்.வி.சேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் எஸ்வி சேகர் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமீப காலமாக பல அதிரடி கருத்துக்களை எஸ்வி சேகர் கூறி வந்தார். இந்நிலையில் பிராமணர்களுக்காக தனி கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 33 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.