தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.