தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான கருத்துக்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல்களும் ஏற்படுகிறது. அதனைப் போலவே youtube தளங்களும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை உடைய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகின்றது.

இதனை தடுக்கும் விதமாக உழவு பிரிவு காவலர்கள் இணையதளங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அரசுக்கு எதிரான மற்றும் ஆதரவான பதிவுகள் மற்றும் குற்றச்சாட்டுகளை யார் பதிவு செய்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறார்கள். அதனை ஆதாரத்துடன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வரும் நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.