தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நுறி மையம் சார்பாக  பிப்ரவரி 18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்க உள்ளன.

இந்த முகாம் பாவை பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 18ஆம் தேதி காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் எனவும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது