ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் மீது கல் ஏறியும் சம்பவம் சமீபமாக அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில் பெங்களூரு – சென்னை வரும் பிருந்தாவன் ரயில் ஜோலார்பேட்டை வந்தபோது சிறுவர்கள் விளையாட்டாக கல் எறிந்ததில் ரயிலின் முகப்பு கண்ணாடி உடைந்தது. பெற்றோரை அழைத்து அதிகாரிகள் அறிவுரை கூறி அனுப்பினர்.

இந்நிலையில், ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153-ன் படி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.