கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒளியுல்லா ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பெருவிழா கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த மார்க்க பேருரை ஆற்றும் நிகழ்ச்சி இன்று பிப்ரவரி 6ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 11ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.