கோவில்பட்டியில் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ‘போதை இல்லா பாதை, இடைநின்ற பள்ளி மாணவர்கள் சேர்க்கை’ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கூறியுள்ளதாவது, ஊர் அமைதியாக இருந்தால் தான் கல்வி நிறுவனங்கள், தொழில் வளம் பெருகும் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் பணப்புழக்கமும் அதிகரிக்கும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும்  270 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத நிலை என கூறினார். மேலும்  ரவுடித்தனத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். படிக்க முடிந்த அளவுக்கு படிக்க வேண்டும் எனவும் இன்றைய சூழலில் படிக்க தவறினால் பின்னால் படிக்க முடியாத நிலை ஏற்படும். ஆசிரியர்கள் கண்டித்தால் பயம் வேண்டாம் அவர்களின் கண்டிப்பு நம்மை உயர்ந்த  நிலைக்கு கொண்டு செல்லும். குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை அளிப்பது ஒவ்வொரு  பெற்றோரின் கடமையாகும். கஞ்சா, குட்கா, போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் எனவும் கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் 8300014567 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து கோவில்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், பத்மாவதி, பாஸ்கரன் மற்றும் போலீசார், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.