தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி அட்மிஷன் ஆரம்பித்த நிலையில் அதிகபட்சமாக சேலத்தில் 21 ஆயிரம் மாணவர்களும் அதற்கு அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் 16 ஆயிரத்து 750 மாணவர்களும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அரசின் காலை உணவு திட்டம் போல பல திட்டங்களால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை தேடி வருகிறார்கள். எனவே சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.